சென்னை: கோயம்பேடு மார்க்கெட் ரூ.10 கோடி செலவில் மின்விளக்குகள் அமைத்து சீரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான டெண்டரை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ கோரியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் பிரமாண்டமான கோயம்பேட மார்க்கெட் எனப்படும் மொத்த சந்தை வியாபார ஸ்தலம் உள்ளது. இது பூந்தமல்லி ஹைரோடு மற்றும் நெசப்பாக்கம் சாலையை ஒட்டி அமைந்துள்ளது மற்றும் நகரத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் எளிதாக அணுகும் வகையில் உள்ளது.  இது ஆசியாவின் மிகப்பெரிய அழுகும் பொருட்கள் சந்தை என கூறப்படுகிறது. . இந்த சந்தை வளாகம் 295 ஏக்கர் (1.19 கிமீ 2 ) பரப்பளவில் பரவியுள்ளது . 1996 இல் திறக்கப்பட்ட இந்த வளாகத்தில் சுமார் 3,100 கடைகள் உள்ளன, இதில் 1,000 க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் மற்றும் 2,000 சில்லறை கடைகள் அடங்கும். இவற்றில், 850 பழக் கடைகள்.  கட்டம் I இல், 3,194 கடைகளை நிர்மாணிப்பதன் மூலம் சுமார் 70 ஏக்கர் (280,000 மீ 2 ) பரப்பளவில் அழுகும் பொருட்களுக்கான மொத்த சந்தை உருவாக்கப்பட்டது . சந்தையில் காய்கறி கடைகளுக்கு இரண்டு தொகுதிகள் மற்றும் பழங்கள் மற்றும் பூக்கடைகளுக்கு தலா ஒன்று உள்ளன.  இந்த மொத்த சந்தை அதிகாலை 2 மணி முதல்  இரவு 10 மணி வரையிலும் இயங்குவதால், சந்தைக்கு தினமும் சுமார் ஒரு லட்சம் வியாபரிகள் மற்றும் பொதுமக்களும், ஆயிரம் முதல் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும் வந்து செல்கின்றன.

இந்த மார்க்கெட்டின் பல பகுதிகள் சமீப காலமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சரி செய்து தரும்படி வியாபாரிகள் அரசுக்குக்கு கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் மார்க்கெட்டில் போதிய வெளிச்சம் இல்லை என்பதால், அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தர கோரிக்கை வைத்திருந்தனர்.

அதை ஏற்று கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை ரூ.10 கோடி செலவில் சீரமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான  டெண்டரை கோரிய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்  கோரியுள்ளது.

அதன்படி,  கோயம்பேடு மார்க்கெட்டில் உயர் கோபுர விளக்குகள், T வடிவ மின்கம்பங்கள் மற்றும் மின் விளக்குகள் அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது.