தீபாவளி நெருங்கும் நிலையில் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர்.

இதனால் கோயம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய சாலையிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

பொங்கல், தீபாவளி மட்டுமன்றி ஆயுதபூஜை மற்றும் வார இறுதி நாட்கள் உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கோயம்பேடு பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே மாறிவிட்டது.

இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் இதனால் கோயம்பேட்டில் கூட்ட நெரிசல் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

https://x.com/UpdatesChennai/status/1722289099057279468

இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இதுவரை திறக்கப்படவில்லை என்றாலும் தீபாவளிக்காக கோயம்பேடு பேருந்து நிலையம் சந்திக்கும் கடைசி கூட்ட நெரிசல் இந்த ஆண்டு தீபாவளியாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.