சென்னை

பொது இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது.   இந்த கூட்டத்திற்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை தாங்கினார்.   இதில் காவலர்களுக்கான சலுகைகள், விடுப்புக்கள், வீட்டுவசதிக்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமது உரையில்,  குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் காவல்துறை என்பது,இல்லாமல், குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும்

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைக் களைந்திடக் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பாக பொது இடங்களில், பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும்”என வலியுறுத்தி உள்ளார்.