சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்  என இன்று  2வது நாளாக சட்டப்பேரவையில் இன்று வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  திமுக அரசுமீது  அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வீசினார்.

இந்த விவகாரத்தை மாநிலஅரசு விசாரித்தால் நீதி கிடைக்காது என்றவர்,  நான் சொன்ன மருந்து வேறு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அல்சர் மருந்தை காட்டுவதாகவும் கூறினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை 3-வது நாள் அமர்வு: கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரி அதிமுக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வி நேரத்திற்கு முன்னதாக கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேச அனுமதிக்க வேண்டும்  என கோரிய நிலையில், அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததால், அனுமதி கோரி என தொடர் முழக்கமிட்டு அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி தலைமையில்  இன்று 2வது நாளாக அவையில் இருந்து அதிமுக  வெளிநடப்பு செய்தது.  பின்னர் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள்  என்று திமுக அரசை குற்றம் சாட்டியவர்,  மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மக்களின் பிரச்னைகள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என பல முறை குரல் கொடுத்தோம். விஷச்சாராயம் மக்களின் உயிர் பிரச்னை. அதனால் தினந்தோறும் மக்கள் உயிரிழக்கிறார்கள். அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என குரல் கொடுத்தோம். ஆனால்,  இன்றும் விஷ சாராய விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை

தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கில் செயல்படுகிறது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தினந்தோறும் மக்களின் உயிர் பறிபோகிறது, இதில் அரசின் செயல்பாடு என்ன? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன என்றவர்,

விஷ சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரின் நிலை என்ன? என கேள்வி எழுப்பியவர், அங்கு சிகிச்சை அளிக்க போதுமான மருந்து இல்லை. அதுதொடர்பான  நான் சொன்ன மருந்து வேறு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லும் மருந்து வேறு.  நான் விஷச்சாராய முறவுக்கான ஹோமிபிசோல் மருந்தை சொன்னேன். ஆனால், அவர் ஓமிபிசோல் எனப்படும் அல்சர் மருந்தை சொல்கிறார் என்றவர், நான் சொன்ன மருந்தின் தட்டுப்பாடு இன்னமும் நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.

திமுக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையத்தால் எந்தவொரு உண்மையும் வெளிவரப் போவதில்லை என்றவர், இந்த கள்ளச்சாராய சாவு குறித்து  சி.பி.ஐ. விசாரணை அமைக்க வேண்டும்.  விஷ சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரே தவறான தகவல் தருவதால், ஆணைய விசாரணை சரியாக இருக்காது. அதாவது மாநில அரசு விசாரித்தால் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதால்தான் சிபிஐ விசாரணை கோருகிறோம். அதுவே உண்மையை வெளிக்கொண்டு வரும், நீதியை நிலைநாட்ட, குற்றவாளிகள் தண்டிக்கப்பட சி.பி.ஐ. விசாரணை அவசியம் என்று வலியுறுத்தினார்.

மேலும், இதுகுறித்து நாள் சட்டப்பேவையில்  பிரச்னையை எழுப்பும் போதே முதலமைச்சர் பதில் சொல்லி இருந்தால் அவரின் கருத்தை ஏற்றிருப்போம், ஆனால் அவர்கள் அப்போது பதில் அளிக்க முன்வரவில்லை. தற்போது, பொய்யான காரணங்களை கூறி உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள் என்றவர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் மற்றும்  பாதிக்கப்பட்ட மக்களுக்காக திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்றவர், அவர்களுக்கு கூட்டணி கட்சிகளான தேசிய கட்சிகளும் கூட எதுவும் பேசவில்லை என கடுமையாக சாடினார்.