உதகை
இன்று உதகையில் முதல்வர் மு க ஸ்டாலின் 124 ஆம் மலர் கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
வருடம் தோறும் மே மாத இறுதியில் உதக மண்டலத்தில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கமாகும், இதைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக இந்த மலர் கண்காட்சி நடைபெறவில்லை. இதனால் சுற்றுலாப்பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது கொரொனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால் இந்த ஆண்டு மீண்டும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சி இன்று முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது. இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த 124 ஆம் மலர் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார்.
இந்த கண்காட்சி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடப்பதால் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பில் உள்ளனர். மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வரும் 4 ஆம் தேதி பணி நாளாக அறுவிக்கப்பட்டுள்ளது.