திருவண்ணாமலை

ன்று திருவண்ணாமலையில் 600 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மிகக் குறுகிய காலத்தில் திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி தனது மருத்துவ சேவையால் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. இங்கு திருவண்ணாமலை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் வந்து சிகிச்சை பெற்றுக் குணமடைந்து செல்கின்றனர்.

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மருத்துவமனையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மருத்துவமனையை பார்வையிடுகின்றார்.

பிறகு முதல்வர் மு க ஸ்டாலின் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில் நடைபெறும் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

[youtube-feed feed=1]