சென்னை

பிஎல் 2023 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.   இதுவரை இந்த அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது.   இதையொட்டி உலகெங்கும் உள்ள பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளார்.

முதல்வர் தனது டிவிட்டரில்,

அனைத்து சூழல்களுக்கும் திட்டம் வைத்துள்ள எம்.எஸ்.தோனியின் தலைமையில் 5வது ஐபிஎல்  கோப்பையை வென்ற சிஎஸ்கேவின் மஞ்சள் படைக்கு வாழ்த்துகள். கடினமான சூழ்நிலையைச் சிறப்பாக எதிர்கொண்ட ஜடேஜா சென்னை அணிக்கு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.”

எனப் பதிந்துள்ளார்.