சென்னை: அரசு பணியில் பணியாற்றியவர்களில், பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். வீரா எனும் மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு பணிகளில் உள்ளவர்கள் பணிக்காலத்தில் எதிர்பாராதவிதமாக மரணத்தை தழுவினால், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு அடிப்படையில் தமிழ்நாடு அரசு, பணி வழங்கி வருகிறது. அதன்படி, பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் .
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான “வீரா” என்ற மீட்பு வாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வாகனத்தின் பயன்பாட்டினை துவங்கி வைத்த பிறகு வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து தீயணைப்புத்துறையினரின் விளக்கத்தை பார்வையிட்டார்.
பணிக்காலத்தில் உயிரிழந்த 53 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் .
இதையடுத்து, சாலை விபத்து மீட்பு மற்றும் விடுவிப்பு வீரா வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.