திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று ( ஜனவரி 7-ந் தேதி ) அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்,  ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த விழாவில், ரூ. 1595 கோடியில் 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 111 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

மேலும், திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 50 புதிய பேருந்து சேவைகளையும் முதல்வா் தொடங்கிவைத்தார். அதேபோல், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற  நிகழ்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார்.  அங்கு அவருக்கு அமைச்சர்கள், கட்சியினர், அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்நது,  மதுரையில் இருந்து கார் மூலம்  திண்டுக்கல் சென்றார். திண்டுக்கல் செல்லும் வழியில்,  மதுரை- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டாலினுக்கு திமுகவினர் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட;ம வந்த முதல்வருக்கு அமைச்சர் திண்டுக்கல் பெரியசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள  ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழா மேடைக்கு சென்ற முதல்வர்,   ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்jர். இதில், இதில் 111 முடிவுற்ற பணிகள், 212 புதிய பணிகள் ஆகும். . 30,000 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும்  வழங்கினார். மேலும்,  1,02,000 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து,  விழா மைதானத்தில் அரசு துறைகளின் கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைத்து பார்வையிட்டதுடன்,  திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகத்தின் புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தீரர்கள் வாழ்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என திண்டுக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புற உள்கட்டமைப்பும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு என்றார்.

பின்னர்  திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

  1. “திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் சாலை தெரு விளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ரூ.16 கோடியில் நிறைவேற்றப்படும்.
  2. மாநகராட்சி பாதளா சாக்கடை, சுத்திகரிப்பு நிலையம் ரூ.8 கோடியில் சீரமைக்கப்படும்.
  3. இடும்பன்குளம், சண்முகா நதி ரூ.6 கோடியில் மேம்படுத்தப்படும்.
  4. புதிய நத்தம் கலை அறிவியல் கல்லூரியில் ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
  5. மார்க்கம்பட்டியில் முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தெழிற்சாலை ரூ.7 கோடியில் அமைக்கப்படும்.
  6. கொடைக்கானல் மலை கிராமத்தில் 100 ஏக்கரில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சுற்றுலா முதலீட்டு பூங்கா அமைக்கப்படும்.
  7. ஒட்டன்சத்திரத்தில் ரூ.17 கோடி செலவில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.
  8. ஏற்றுமதியாகும் கண்வலி கிழங்குக்கு நியாயமான, நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்”

என 8 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

[youtube-feed feed=1]