சென்னை:
யிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளார்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சரை கண்டித்துள்ளதுடன், நீட் தேர்வினால் தான் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில், “உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள்” என்று கேள்வி கேட்க பா.ஜ.க.வுக்கு இதுவா நேரம்? பரப்புரை செய்யவோ விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும் – எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களைக் காப்பாற்றுங்கள். உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்கத் தடையாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்யும் நம் இலக்கு வெகு தொலைவில் இல்லை. நமது குரல் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. இது ஒட்டுமொத்தமான இந்தியாவின் குரலாக மாறும். அனைவரும் இணைந்து போராடி வெல்வோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.