சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இண்டல்போல் உதவியை நாடியுள்ளோம் என தெரிவித்துள்ளார். மேலும், மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் உள்பட 100 அறிவிப்புகளை வெளியிட்டார்.
- தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது
- ரூ 1.70 கோடி செலவில் புதிய காவல் நிலையம்
- இரண்டு புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்
- ஏற்காட்டில் புதிய போக்குவரத்து காவல் நிலையம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகிறது. காலை கேள்வி நேரம் முடிவடைந்ததும், காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறை தொடர்பான 100 அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு அமைதி மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.
திருவிழாக்களை எந்த பிரச்சனையும் இன்றி அமைதியாக நடத்தி காட்டி உள்ளோம்.
அறிவிக்கப்பட்ட 190 திட்டங்களில் 179 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. *
குற்றங்களை குறைக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் அனைத்து துறைகளும் இந்திய அளவில் முதல் இடத்தை நோக்கி முன்னேறி வருகின்றன.
எனது அமைச்சரவை சகாக்களால் தான் அரசுக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அவர்களுக்கு நன்றி என்று கூறினார்.
மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்.
மெரினா கடற்கரை கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறைக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
அனைத்து காவல்நிலையங்களுக்கு கலவரத்தை அடக்க பயன்படும் உபகரணங்கள் வழங்கப்படும்.
ஏற்காட்டில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும்.
கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடியில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும்.
201 புதிய காவல் குடியிருப்புகள் கட்டப்படும்
மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்.
உள்பட 100 அறிவிப்புகளை வெளியிட்டார்.