சென்னை:
திருச்சி சமயபுரத்தில் யானை மிதித்து பலியான பாகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை, பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்றது. உயிரிழந்த பாகன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி யுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel