வேலூர்

முதல்வர் மு க ஸ்டாலின் பெரியாரின் 145ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா (செப்.17-ந் தேதி), பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15-ந் தேதி), திமுக உதயமான ஆண்டு (செப.17-ந் தேதி) ஆகிய விழாக்களை திமுக முப்பெரும் விழாவாகக் கொண்டாடி வருகிறது.

கருணாநிதி நூற்றாண்டு விழாவான இந்த அண்டில், பவள விழா ஆண்டில் திமுக காலடி எடுத்து வைத்துள்ளது. ஆகவே இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இன்று திமுக முப்பெரும் விழா வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில். திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் மாலை 5 மணியளவில் முப்பெரும் விழா தொடங்குகிறது.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் வேலூர் மாவட்டம் காட்பாடி சென்றடைந்தார்., இன்று தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் என்பதால் முதல்வர்  மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு க ஸ்டாலின் வேலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்.