சென்னை: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்க உள்ள இந்திய வம்சாவழியைச்சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட, இந்திய இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த தமிழர் தர்மன் சண்முகரத்னம் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன் காரணமாக தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9வது அதிபராக அடுத்த வாரம் பதவி ஏற்க உள்ளார். இதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இ;ej நிலையில், சிங்கப்பூர் அதிரபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்துகள். உங்களின் வெற்றி சிங்கப்பூர் மக்களின் பண்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. உங்களின் தமிழ் பாரம்பரியம் மற்றும் ஈர்க்கக்கூடிய தகுதிகள் எங்களை பெருமைப்படுத்துகிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு பாடலின் வரிகளையும் பதிவிட்டுள்ளார்.