சென்னை

மிழக  முதல்வர் மு க ஸ்டாலின் தாங்கள் அடுத்த மொழி போருக்கு ஹ்டயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

**EDS: SCREENSHOT VIA PTI VIDEO** Chennai: Tamil Nadu Chief Minister and Dravida Munnetra Kazhagam (DMK) chief MK Stalin addresses the media after attending the opposition parties’ meeting in Patna, in Chennai, Friday, June 23, 2023. (PTI Photo)(PTI06_23_2023_000257B)

தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்ர் மு.க.ஸ்டாலின், ”

”தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே வரும் மார்ச் 5-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட 40 கட்சிகளை அழைத்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.  தொகுதி மறுசீரமைப்பின் பேரில் தென்னிந்தியாவின் தலை மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.

அனைத்து வளர்ச்சி குறியீடுகளிலும் முதன்மை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவிருக்கிறது.  தற்போது தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகலை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல பத்தாண்டுகளாக குடும்பக் கட்டுப்பாடு மற்றும் பெண்கள் கல்வி, சுகாதாரம் மூலம் நாம் இதை சாதித்துள்ளோம்.

மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்திலேயே நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால், தமிழ்நாடு 8 தொகுதிகளை இழக்கக்கூடும். அதன்படி தமிழகத்திற்கு 31 எம்.பிக்கள் தான் இருப்பார்கள்.

 மும்மொழி கொள்கை போன்ற விவகாரங்கள் மொழிப்போருக்கு வித்திடுகிறது,  நாங்கள் அத்தகைய மொழிப்போருக்கு  தயாராக உள்ளோம்”

என்று தெரிவித்துள்ளார்.