சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்குக்கு இன்று 90வது பிறந்தநாள். அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது  பிறந்தநாளை காங்கிரஸ் தொண்டர்கள் எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டள்ளார். அதில், இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச் சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.