சென்னை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸுக்கு நேற்று முதல்வர் விருது வழங்கி உள்ளார்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது.   இதற்காக மூத்த திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  ஆரூர்தாஸ் சுமார் 1000 படங்களின் உரையாடலில் பங்கேற்றுள்ளார்.

இவர் உரையாடல் எழுதிய பாசமலர், வேட்டைக்காரன், அன்பே வா உள்ளிட்ட  பல படங்கள் வெற்றி விழா கொண்டாடியவை ஆகும்.  இவர் நடிகர்களுக்காக இல்லாமல் கதை மற்றும் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப வசனம் எழுதியதால் இவரது வசனங்கள் இன்றும் ரசிகர்களால் போற்றப்படுகிறது.

நேற்று சென்னை தி நகரில் உள்ள ஆரூர்தாஸின் இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அவரை சந்தித்தார்.  அப்போது அவர் ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை வழங்கி உள்ளார்.