சென்னை:
முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் தொழில்நுட்ப கல்லூரியை முதல்வர் தொடங்கி வைத்தார்.
ஆர்கே நகரில்  அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரி மற்றும்  49 கோடி 35 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி, அலுவலக, பணி மனைக் கட்டடங்கள், காட்சிக் கூடங்கள் மற்றும் பரிணாம வளர்ச்சிப் பூங்கா ஆகியவற்றை  காணொலிக் காட்சி மூலமாக முதல்வர்  திறந்து வைத்தார்.
cm function
தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை, டாக்டர் ராதா கிருஷ்ணன் நகரில் அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கிவைத்தார்.
இந்த அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கான நிரந்தர கட்டடம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் கட்டி முடிக்கப்படும் வரை , தற்காலிகமாக சென்னை, தரமணியில் உள்ளமைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் இயங்கும்.
மேலும், சென்னை, தரமணியில் உள்ளமைய பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 1,26,475 சதுரஅடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் நான்கு தளங்களுடன், 40 பணிமனைகள், சரக்கு மற்றும் பணியாளர்களுக்கான தனித்தனி மின்தூக்கிகள், பணியாளர் அறைகள், சாய்வுதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 22 கோடி 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பணிமனைக் கட்டடம்;
திருச்சிராப்பள்ளியில் 1 கோடி 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம்;
மதுரையில் 1 கோடி 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம்;
திருநெல்வேலியில் 1 கோடி61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகக் கட்டடம்;
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 7 கோடி 97 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாகக் கட்டடம்;
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 7 கோடி 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாரதி தாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்வி மற்றும் நிர்வாகக் கட்டடம்;
மதுரையில் தமிழ்நாடு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 1 கோடி 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனைக் கட்டடம்;
சென்னை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தைச் சார்ந்த பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் 2 கோடி 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அணுக்கரு ஆற்றல் காட்சிக்கூடம், 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதுமை காண்காட்சிக் கூடம் மற்றும்
1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிகாட்சிக் கூடம், திருச்சிராப்பள்ளி,
அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பரிணாம வளர்ச்சிப் பூங்கா;
என மொத்தம் 49 கோடி 35 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி, அலுவலக, பணி மனைக் கட்டடங்கள், காட்சிக் கூடங்கள் மற்றும் பரிணாம வளர்ச்சிப் பூங்கா ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும், தேனி மாவட்டம் வீரபாண்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆகிய இடங் களில் 3 அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தர்மபுரி மாவட்டம் கடத்தூர், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், தஞ்சாவூர் மாவட்டம் ரகுநாதபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஆகிய இடங்களில் 4 அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.