மகாராஷ்டிரா:

மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் இக்கால கட்டத்தில் பெரும்பாலானோருக்கு வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஆழ்வாரைச் சேர்ந்த 85 வயதுடைய முதியவர் காய்ச்சல் காரணமாக, மார்ச் 31 ஆம் தேதி எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து ராஜஸ்தானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

மின் கட்டணம் செலுத்த குறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மின்சார கட்டணம், மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்த கால அவகாசம் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க ராஜச்தான் மாநிலத்திற்கு உடனடியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.