சென்னை

கி புயலால் கன்யாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று உருவான ஒகி புயலால் தென் தமிழ்நாட்டில் பல பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன.  கன்யாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியது.  ஆயிரக்கணக்கான மரங்களும், பல மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன.  புயல் மற்றும் மழையால் ஐந்து பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஓகி புயல் பாதிப்புக் குறித்து இன்ரு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது ஒகி புயலால் கன்யாகுமரி மாவட்டத்தில் உயிர் இழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]