ராஞ்சி
விரைவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதிவரை பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. குறிப்பாக ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இதே கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனவே பீகார் மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்தபடியாக விரைவில் ஜார்க்கண்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் சம்பாய் சோரன் உத்தரவிட்டதுடன் சாதிவாரி கணக்கெடுப்புக்கான வரைவு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது மாநிலமாக ஜார்க்கண்ட் மாற உள்ளது.