சென்னை

ன்றைய திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி திமுக 7ஆம் முறையாக ஆட்சி அமைக்கும் எனக்  கூறியுள்ளனர்.

இன்று காலை முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் என 850-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

“சமூக வலைத்தளங்களில் திமுகவை பலப்படுத்த வேண்டும். முதலமைச்சர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுக-வுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. 2026 சட்மன்ற தேர்தலில் 200 இல்லை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். 2026-ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி”

என உரையாற்றி உள்ளார்.

முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது உரையில்,

“ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் நம்முடைய இலக்கு. 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெல்லும் . 2026-ல் வெற்றி நமதே. 2026 தேர்தல் பணிகளை முழுவீச்சில் களத்தில் மேற்கொள்ள வேண்டும்”

என்று கூறி உள்ளார்.