சென்னை,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து  மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த  ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து சுங்கச் சாவடிகளில் 40 சதவிகித கட்டணத்தை உயர்த்தப்பட்டி ருந்த நிலையில், தற்போது சுங்கச்சாவடிகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 350-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 44 சாவடிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.   இந்த சுங்கச்சாவடிகளின் மூலம் வசூலான பணம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமாக உள்ளதாக ஏராளமான புகார்கள் குவிந்துள்ளது.

இந்நிலையில் மோடி தலைமையிலான பாரதியஜனதா அரசு ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் மூடப்படும் என  கூறியது. ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

இந்நிலையில், விரைவில் நாடு முழுவதும் உள்ள வாகன சுங்கச்சாவடிகளை மூடுவது குறித்து , பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும், இதுகுறித்து மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர்  கூறி உள்ளார்.