புதுவை:
புதுச்சேரியில் மே 17ந்தேதி மதுரை மதுக்கடைகள் திறக்கக்கூடாது என்று மாநில அரசு மீண்டும் உத்தரவிட்டு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கலால் வரி உயர்த்துவது தொடர்பாக  இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  வருவாய்வரி , கலால் வரிகளை உயர்த்து குறித்து விவாதிக்கப்பட்டது.
ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் கொடுத்து, சில கடைகள் (மதுக்கடைகள் ) திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், புதுச்சேரியிலும் மதுக்கடைகள் திறப்பதை மே 17ந்தேதி வரை ஒத்தி போடப்பட்டு உள்ளது.
அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி,  கொரோனா   நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு உடனடியாக நிபுணர் குழுவை அனுப்பக்கோரி மத்திய அரசுக்கு பகடிதம் அனுப்பி உள்ளதாக கூறினார்.
இந்த ஊரடங்கால் மாநில அரசுகள் இழந்த பொருளாதாரத்தை மத்திய அரசுதான் ஈடுகட்ட வேண்டும் என்றும் குறிப்பிட்டவர், மாநிலத்தில் மதுக்கடைகள் மே 17ந்தேதி திறக்கப்படாது, அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.