சென்னை: தூய்மை Mission திட்டத்தை அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த திட்டம் குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் வகையில் ஏராளமான விழிப்புணர்வுகளை மக்களின் சேர்க்கும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது.

மத்தியஅரசு ஏற்கனவே சுவாச் பாரத் அபியான் என்ற பெயரில், தூய்மை இந்தியா இயக்கத்தை நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததும், திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் நாடு தழுவிய பிரச்சாரமாக தூய்மை இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டு, நாடு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசும், சுற்றுச்சூழலை கருத்தில் கொணடு தூய்மை மிஷன் என்ற திட்டத்தை தொடங்க உள்ளது,. தூய்மையான சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ‘தூய்மை மிஷன்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைக்க இருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
. ‘தூய்மை மிஷன்’ என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு. சுகாதாரமான உலகத்தை அமைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய வாழ்வியல் அங்கம்! நம்முடைய உலகம் என்றும் நமக்கானதாக இருக்க, மக்கும் குப்பை – மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவோம். ‘தூய்மை மிஷன்’ தன் இலக்கை நோக்கி வெல்லட்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.
உதயநிதியின் இந்த பதிவைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது! யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெற வேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது. விரைவில் தொடங்கப்படவுள்ள ‘தூய்மை மிஷன்’ திட்டத்தில் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது! யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும்… நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது.விரைவில் தொடங்கப்படவுள்ள #தூய்மை_Mission-இல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!”என்று கூறப்பட்டுள்ளது.