வயநாடு:
ராகுல்காந்தி கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, அங்குள்ள மக்களுக்கு புரியும் வகையில், மலையாள மொழியில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மொழி பெயர்த்தார். அந்த மாணவிக்கு ராகுல் பாராட்டு தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களிலும் பாராட்டு குவிந்து வருகிறது.வகுப்பு மாணவி
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, தனது தொகுதியான கேரளாவின் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்கு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.
அவரது ஆங்கில பேச்சு, பலருக்கு புரிய சிரமப்பட்ட நிலையில், யாராவது மொழி பெயர்க்க விரும்புகிறீர்களா என்று மாணவ மாணவிகளை பார்த்து கேள்வி எழுப்பினார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், 12ம்வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், தான் மொழி பெயர்க்க தயார் என்று கூறினார். அப்போது மேடையில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் மாணவியின் தைரியத்தை எண்ணி புன்னகைத்தார்.<
இதையடுத்து அந்த மாணவியை மேடைக்கு அழைத்த ராகுல், தனது பேச்சை மொழிப்பெயர்க்க கூறினார். மாணவி சஃபா செபின் மேடை ஏறி, ராகுலின் பேச்சை அனாயசமாக மொழிபெயர்த்து அசத்தினார். இதற்கு பள்ளி மாணவ மாணவிகள் உள்பட நிகழ்ச்சிக்கு வந்திருந்த காங்கிரசார், பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொதுமக்கள் மாணவியின் மொழி பெயர்ப்பை கை தட்டி ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தினர்.
ராகுல் பேசி முடிந்ததும், அந்த மாணவியை அழைத்த, சிறப்பாக மொழிபெயர்த்தாக பாராட்டினார்
முன்னதாக மேடை ஏறியதும் அந்த மாணவி ராகுலுக்கு வணக்கம் கூற, பதிலுக்கு ராகுல் கையை குலுக்கி மரியாதை செய்தார்.
இந்த நிகழ்வு குறித்து கூறிய மாணவி சஃபா செபின் தனது வாழ்வில் இது மறக்க முடியாத நாள் என்று கூறினார்.