சென்னை: டிஜிபி அலுவலகம் எதிரே நடைபெற்ற இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிபி அலுவலகம் எதிராக விசிக ஏர்போர்ட் மூர்த்தி மோதல்: கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி…]இரு நாட்களுக்கு முன்பு, டிஜிபி அலுவலகம் எதிரே புரட்சி தமிழகம் கட்சிதலைவர் ஏர்போர்ட் மூர்த்திiய விசிகவினர் தாக்க முயற்சி செய்தபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுதொடர்பான வீடியோவும் வைரலானது.
டிஜிபி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும் டிஜிபி அலுவகம் முன்பே தாக்குதல் நடத்தும் அளவுக்கு விசிகவுக்கு அவ்வளவு தைரியம் எங்கிருந்தது வந்தது என அரசியல் கட்சியினரும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர்.
கத்தியை கொண்டு ஏர்போர்ட் மூர்த்தி விசிகவினரை தாக்கியதாக மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தனர்.கத்தியை கொண்டு ஏர்போர்ட் மூர்த்தி விசிகவினரை தாக்கியதாக மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டார். மெரினா காவல்துறையினர் அவரை கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் கைது செய்யப்பட்ட ஏர்போர்ட் மூர்த்தி, மருத்துவ பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.