சென்னை
எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சியை மோசமான ஆட்சி என ஒரு நிகழ்வில் கருத்து தெரிவித்ததை கண்டிக்காத ஜெயா டிவி மீது கடும் கோபம்.
இது பற்றி ஒரு ஊடகத்தில் வந்துள்ள செய்தி இது.
நேற்று மாலை ஜெயா டிவியில் தமிழகப் பிரச்னைகள் பற்றி நடந்த விவாத நிகழ்வு ஒன்றில் பலரும் கலந்துக் கொண்டு பேசினார்கள்.
நிகழ்ச்சியின் நெறியாளர் மோகன்ராஜ்.
இதில் இதுவரை ஜெயா டிவியின் நிகழ்வில் கலந்துக் கொள்ளாத சில புது முகங்களும் இருந்தனர்.
அதில் ஒருவர் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி அரசைப்பற்றி மிகவும் கடுமையாக விமரிசித்த்தார்.
அவர் கூறியதாவது.:
ஒரு அமைச்சர் ஆமாம் என்றால் மற்றவர் இல்லை என்கிறார்.
அரசின் எந்த ஒரு துறையைப் பற்றியும் இவர்கள் பேசுவதும் இல்லை, அதற்கான தகுதியும் யாரிடமும் இல்லை.
தினகரனோடு இணக்கமாக போகலாம் என்று ஒருவர் சொன்னால், இன்னொருவர் போகக் கூடாது என்கிறார்,
இதைப் பார்க்கும் தொண்டர்கள் இவர்களை கேவலமாக நினைக்கிறார்கள்.
சசிகலா படத்தை எடுத்த அதே அமைச்சர்கள் தானே முன்பு அவர் காலிலும் விழுந்தார்கள்?
இதற்கு பதில் சொல்வார்களா?
இப்படிப்பட்டவர்கள் நடத்தும் ஆட்சியெல்லாம் ஒரு ஆட்சியா?
என பயங்கர கோபத்துடன் பேசி இருக்கிறார்.
இதனால்தானோ என்னவோ, இந்த நிகழ்வு அரைகுறையாக நிறுத்தப்பட்டது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட முதல்வர் கடும் கோபம் அடைந்துள்ளாராம்.
அவர் பூங்குன்றன் மூலமாக ஜெயா டிவியின் தலைமை பொறுப்பில் இருக்கும் விவேக் கிடம் தன் கோவத்தை தெரிவித்து மிகவும் கண்டனத்தையும் தெரிவித்தாராம்.
இது தினகரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக நடத்தும் வேலைகளில் ஒன்று எனவும் இதனால் முதல்வரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தததாகவும் சொல்லப்படுகிறது,
மேலே குறிப்பிட்டது எதுவும் உண்மையா என நிச்சயமாகத் தெரியவில்லை.
ஆனால் பல ஊடகங்களிலும் இந்த செய்தி பரவி வருகிறது.