டில்லி:

யுதப்படை தீர்ப்பாயத்தின் அடுத்த தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரைத்துள்ளார்.

ஆயுதப்படைத் தீர்ப்பாயம் (AFT) இந்தியாவில் உள்ள இராணுவ தீர்பாயமாகும். இது ஆயுதப்படைச் சட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்த தீர்ப்பாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு (appeal) செய்யலாம்.  அதுகுறித்து தீர்ப்பாயம் ஆய்வு செய்து தீர்ப்பு ழங்கும். பாதிக்கப்பட்டவர் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று கருதினால், தீர்ப்பாயத்தில் முறையிடலாம். அது குறித்து விசாரிக்கும் தீர்ப்பாய்ம,  சட்டத்தை சரியாக பயன்படுத்தவில்லை, உண்மை நிலையை மாறாகப் புரிந்து கொண்டிருத்தல், தனது எல்லையை மீறி தீர்ப்பு வழங்கியிருத்தல், அதிகார முறைகேடு, ஒருபக்கச் சார்பான நிலை, ஏற்றுக்கொள்ளவியலாச் சான்றை கருத்தில் கொள்வது அல்லது ஏற்றுக் கொள்ளத் தக்க சான்றை கருதாது முடிவடுத்தல் போன்ற காரணங்கள் தெரிய வந்தால், தீர்ப்பை மாற்றும் அதிகாரம் கொண்டது.

முந்தையத் தீர்ப்பை கருத்தில் கொள்ளாது வழக்கை முற்றிலும் திரும்ப விசாரித்து தீர்ப்பு வழங்கும அதிகாரம் மிக்கது.

இந்த தீர்ப்பாயத்தின் நீதிபதி  ஓய்வுபெற உள்ள நிலையில், ஆயுதப்படை தீர்ப்பாயத்தின் அடுத்த தலைவராக டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பரிந்துரைத்துள்ளார். இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.