டில்லி

ன்று காலை நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு தொடங்கி உள்ளது.

இன்று நாடெங்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு காலை 9.30 மணிக்குத் தொடங்கி உள்ளது.

யு பி எஸ் சி நடத்தும் இந்த தேர்வு 750 இடங்களை நிரப்ப நடந்து வருகிறது.

இந்த தேவை மொத்தம் 10.58 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடந்து வருகிறது.

இதில் சென்னையில் 62 மையங்களில் கிட்டத்தட்ட 22,000 பேர் எழுதுகின்றனர்.

இந்த தேர்வு இன்று மாலை 4.30 மணி வரை நடக்க உள்ளது.