நவம்பர் 24ந்தேதி சிவில் நீதிபதிகள் தேர்வு! டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Must read

சென்னை:

வம்பர் 24ந்தேதி சிவில் நீதிபதிகள் தேர்வு நடைபெறும் என்று தமிழக பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே  கடந்த செப்டம்பர் மாதம் சிவில் நீதிபதிகள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. தற்போது தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) நடத்தும் சிவில் நீதிபதிகள் தேர்வு நவம்பர் 24-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 176 காலிப் பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. நவம்பரில் நடைபெறும் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்ததாக மார்ச் 2020-ல் நடைபெறும் அடுத்தகட்ட தேர்வை எழுத வேண்டும்.

முதல்கட்டமாக நவம்பர் 24-ம்தேதி நடத்தப்படும் தேர்வில் 100 கேள்விகள் இடம்பெறும். Multiple Choise Questions அடிப்படையில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இந்த வினாத்தாள் அமைந்திருக்கும். தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தது 40 மதிப்பெண்களை பெற வேண்டும். எஸ்.சி., எஸ்.சி – ஏ., எஸ்.டி. பிரிவினருக்கு 30 மதிப்பெண்களும், MBC, DC, BC (OBCM), BCM) பிரிவினருக்கு 35 மதிப்பெண்களும் தேர்ச்சிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வை எழுதுவதற்கு சட்டப்படிப்பு முடித்ததுடன், 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாக வைக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article