சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் அடையாளமான மெரினா பீச் புளு ஃபிளக் எனப்படும் நீலக்கொடி சான்றிதழ் பெறும் வகையில், ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக மெரினா பீச் முழுவதும்  வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.

கடல் காற்றையும் சென்னையின் அடையாளச் சின்னமான மெரினாவின் புதிய தோற்றம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள இதய வடிவிலான மற்றும் முத்து வடிவிலான  செஃபி பாயிண்டில் காதலர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

மெரினா கடற்கரைப் பகுதியில் நீலக்கொடி சான்றிற்காக சர்வதேச தரத்தில் ரூ.7.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுப் பணிகளை துணைமுதல்வர்  உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்டு 3ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி,  பெருநகர சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் நீலக்கொடி சான்றிற்காக சர்வதேச தரத்தில் 7.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சூழலியலை பேணும் மேம்பாட்டுப் பணிகளை   பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டள்ளது.

நீலக்கொடி கடற்கரைத் திட்டமானது நன்னீர் மற்றும் கடல் பகுதிகளில் நிலத்தின் தன்மையினை மேம்படுத்தும் சர்வதேச முயற்சியாகும். இத்திட்டம் டென்மார்க் நாட்டின் சுற்றுச்சூழல் கல்வி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவளம் கடற்கரை நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற்ற தமிழ்நாட்டின் முதல் கடற்கரையாகத் திகழ்கின்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டினை மேலும் அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சென்னை, கடலூர், இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய கடற்கரைகளை நீலக்கொடி சான்று பெற்ற கடற்கரைகளாக விரிவுபடுத்தும் நோக்கில் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சூழலியலை பேணும் வகையிலான மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட மெரினா கடற்கரைப் பகுதியில் நீலக்கொடி சான்றிற்காக 20 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்தில் 7.31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு ஆகிய நான்கு அம்சங்களின் வாயிலாக உயர்ந்த தரங்கள் நிலை நாட்டப்படுகிறது. நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதால், உலக அளவிலான அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து சுற்றுலா மேம்பாட்டிற்கும், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழிவகை ஏற்படுகிறது.

உள்ளூரில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சமூகங்களை ஆதரித்து கடற்கரை இடங்களை பாதுகாக்க ஊக்குவிக்கிறது. மேலும் நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலாத் துறைகளை ஒருங்கிணைக்க உதவும் ஒரு மதிப்புமிக்க சுற்றுச்சூழல் சின்னமாக வளர்ந்துள்ளது.

இந்த திட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகள் இரவு நேரங்களில் வண்ணமயமாக காட்சி அளிக்கின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆவலோடு கடற்கரைக்கு வந்து ஓய்வெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடற்கரைக்கு வரும் பல குடும்பங்கள் ஓடு வடிவ நாற்காலிகளில் ஓய்வெடுத்தனர், குழந்தைகள் மூங்கில் குடைகளின் கீழ் விளையாடி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள இதய வடிவிலான செல்ஃபி இடங்களில்  காதலர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஏராளமான தம்பதிகளும் அங்கு சென்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

இந்த திட்டத்தின்படி, மெரினா கடற்கரையில் குப்பைகளை போட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர கடைகளும் ஒரே இடத்தில் வரிசையாக அமைக்கப்பட்டு, அவர்களுக்கும் சுத்தம் தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், மெரினா கடற்கரை குப்ப கூளங்கள் இன்றி சுத்தமாக இருப்பதாக ஏராளமானோர் தெரிவித்துள்ளனர். அதுபோல மாற்றுத்திறநாளிகளுக்கும் ஏராமான வசதிகள் செய்யப்பட்டு இருப்பதால், பல பெற்றோர்கள் தங்களது மாற்றுத்திறாளி குழந்தைகளையும் அழைத்துவந்து கடற்கரை வரை சென்று கடலையும், இயற்கையையும், ரசித்து வருகின்றனர்.

சிறப்பு குழந்தைகளுக்கான தட்டையான சறுக்குகள் மற்றும் தட்டையான ரோட்டார் ஊஞ்சல்கள் போன்ற விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. சிறப்பு மகிழ்ச்சிப் பயணம் போன்ற சில உபகரணங்களை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்க வேண்டியிருந்தாலும், இது சிறந்த உள்ளடக்கத்திற்கான தொடக்கம் என்று நலவாழ்வு சங்கங்கள் தெரிவித்தன.

தேனாம்பேட்டை மண்டலத்தின் கீழ் மெரினா பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த திட்டம், 7.31 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டது. மெரினா கடற்கரை யில் புதிதாக சேர்க்கப்பட்ட உள்கட்டமைப்பில் 20 மூங்கில் நிழல் குடைகள், 40 சாய்வு நாற்காலிகள், 12 இருக்கை பெஞ்சுகள், 4 கண்காணிப்பு கோபுரங்கள், 24 குப்பைத் தொட்டிகள், ஒரு பிரதான வளைவு, ஒரு தியான மையம், ஒரு வாசிப்பு அறை மற்றும் 2 செல்ஃபி புள்ளிகள் ஆகியவை அடங்கும்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 12 எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள், 4 இடங்களில் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், தென்னை மரங்கள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, காட்சிப் பதிவு கண்காணிப்பு (CCTV) மற்றும் முதலுதவி அறை, இருப்பு அறை, ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளியல் அறைகள், கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, தானியங்கி இயந்திரம் மூலம் தூய்மையான குடிநீர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் மூலம் சுத்தமான குடிநீரை வழங்கும் ஒரு நீர் விற்பனை இயந்திரம். தூய்மையைப் பராமரிக்க, 82 துப்புரவுப் பணியாளர்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஷிப்டுகளில் பணியமர்த்தப்படுகிறார்கள், 9 துப்புரவு இயந்திரங்கள் இதற்கு துணைபுரிகின்றன. தொடர்ச்சியான பராமரிப்பு ஒரு தனியார் ஒப்பந்ததாரரால் கையாளப்படும்.

“BEAMS திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் ஒரு ஜூரி மூலம் நீலக் கொடி சான்றிதழ் பெறப்பட வேண்டும்,” என்று GCC ஆணையர் ஜே. குமரகுருபரன் கூறினார்.

“GCC நீலக் கொடி சான்றிதழைப் பெற மூன்று மாதங்கள் ஆகலாம், ஆனால் நாங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளோம்,” என்ற மாநகராட்சி ஆணையர், அங்கு ஏற்கனவே போடப்பட்டிருந்த  மரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. மிகவும் நிலையான பாதைப் பொருளான போர்டா பாய்கள் பாதைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

சான்றிதழ் பெற்றதும், இந்தியாவில் நிலையான கடற்கரை சுற்றுலாவிற்கு மெரினா ஒரு மாதிரியாக ஊக்குவிக்கப்படும், இது திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி ஆகிய இடங்களில் இதேபோன்ற நீலக் கொடி கடற்கரைகளை உருவாக்க GCCயின் பரந்த திட்டத்துடன் ஒத்துப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.