சென்னை

ற்போது சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீராகி உள்ளது. 

தமிழகத்தின் வட மாவட்டங்களில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாகக் கனமழை பெய்தது. இதில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தற்போது சாலைகளில் தேங்கிக் கிடந்த தண்ணீர் வடிந்ததால், சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகர பேருந்து இயக்கம் சீராகியுள்ளது. எச்க்ச்டில் மொத்தமுள்ள 603 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை புறநகர் ரயில் சேவை இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. சென்னை சென்டிரல் – அரக்கோணம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.

அத்துடன் சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவொற்றியூரில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.