குடியுரிமை சட்டதிருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல்! அமித்ஷா

Must read

டெல்லி:

திர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள  குடியுரிமை சட்டதிருத்த மசோதா, நாளை  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாப்படி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்றும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலி ருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம்  சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலை யிலும், பாஜக பெரும்பான்மையுடன் உள்ளதால், குடியுரிமை சட்டதிருத்த மசோதா மக்களவையில் நேற்று இரவு நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இந்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். அங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டால், பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, சட்டமாக அமல்படுத்தப்படும்.

More articles

Latest article