டில்லி

ன்று சர்ச்சையை கிளப்பி உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் வருடம் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின் படி ஆப்கானிஸ்தான், வங்க தேசம்,மற்றும் பாகிஸ்தானில் இருண்டு அகதிகளாக வந்த மக்களில் அந்நாடுகளில் சிறுபான்மையினரான இந்து, சீக்கியர், ஜைனர்கள், புத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்துவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

குடியுரிமையை பெற 12 ஆண்டுகள் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்னும் நிபந்தனை இவர்களுக்கு 6 ஆண்டுகளாக குறைக்கப்பட உள்ளது.

இந்த மசோதா கடும் எதிர்ப்புக்கிடையே இந்த வருடம் ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேறியது.

இவ்வாறு இஸ்லாமியர்கள் தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்கும் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதற்கு அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ளோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் அசாம் மாநிலத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. இந்த போராட்டத்தில் பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர், அது மட்டுமின்றி மோடியை எதிர்த்து நிர்வாணப் போராட்டமும் நடந்தது மாநிலத்தில் பரபரபை உண்டாக்கியது.

இன்று இந்த சர்ச்சைக்குரிய மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.