டெல்லி:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பகல் 12 மணி அளவில்  தாக்கல் செய்து பேசி வருகிறார். இதையடுத்து மசோதா குறித்து 6 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு அறிவித்து உள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள ஷரத்துப்படி,  இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லீம்களுக்குக் இந்திய குடியுரிமை வழங்கப்படாது என்றும், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலி ருந்து வந்திருக்கும் இந்து, சீக்கியர், கிறித்துவர், பார்சி, புத்தம், ஜெயின மதம்  சார்ந்த மக்கள் 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்திருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ‘ பாஜக ஆதரவு கட்சிகளுடன் மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்,  இந்தச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று மதியம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால்  தாக்கல் செய்யப்பட்டது. மசோதா குறித்து அமித்ஷா மாநிலங்களவையில் உரையாற்றி வருகிறார்.

அப்போது, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது; இந்திய முஸ்லிம்களுக்கும் இந்த மசோதாவுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் எப்போதும் இந்திய குடிமக்களாகவே இருப்பார்கள் என்று உறுதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து மசோதா மீது விவாதங்கள் நடைபெறும். அனைத்துக்கட்சிகளும் மசோதா குறித்த தங்களது கருத்துக்களை பதிவு செய்ய உள்ளனர். அதன்பிறகே வாக்கெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்படும்.

இந்த மசோதா நிறைவேற பாஜகவுக்கு 121 எம்பிக்கள் ஆதரவு தேவை. ஆனால், பாஜகவுக்கு 128 எம்.பிக்கள் ஆதரவு உள்ளது.  தற்போதைய நிலையில், மாநிலங்களவையின் மொத்த எண்ணிக்கையான 245 உறுப்பினர்களில், 5 இடங்கள் காலியாக உள்ள நிலையில்  240 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 121 எம்பிக்கள் ஆதரவு  கிடைத்தால் மசோதா நிறைவேறி விடும்.

மாநிலங்களவையில் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்சி எம்.பி.க்கள் விவரம்:

காங்கிரஸ் – 46

திரிணாமுல் காங்கிரஸ் – 13

சமாஜ்வாதி- 9

தெலங்கானா ராஸ்டிரிய சமிதி – 6

திமுக – 5

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 5

தேசியவாத காங்கிரஸ் – 4

ராஸ்டிரிய ஜனதா தளம் – 4

பகுஜன் சமாஜ் கட்சி – 4

சிவசேனா – 3

ஆம் ஆத்மி – 3

மக்கள் ஜனநாயக கட்சி – 2

ஐ.என்.டி  – 2

கம்யூனிஸ்டு – 1

முஸ்லீம் லீக் – 1

கேரளா காங்கிரஸ் – 1

மதிமுக – 1

சுயேச்சைகள் – 2

நியமன எம்.பி.-1

[youtube-feed feed=1]