சென்னை:

ந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது.. என்று பிரபல தமிழ்பட இயக்குனர்  கார்த்திக் சுப்பராஜ் ஆவேசமாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் இன்று திமுக போராட்டம் நடத்தி வருகிறது. டெல்லியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஜாமியா, அலிகார் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறியது.

மத்தியஅரசின் இந்த புதிய சட்டத்திருத்தத்துக்கு, எதிராக காங்கிரஸ், திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திரையுலக பிரபலங்களும் தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல தமிழ்ப்பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், கடும் கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,

குடியுரிமை திருத்தச் சட்டம் – தீவிரமாக தவறாகவும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் தெரிகிறது ..

இந்தியாவை மதச்சார்பற்றதாக வைத்திருப்போம்

CAA க்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்

NRC க்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்

மாணவர்கள் மீதான பொலிஸ் வன்முறை கண்டனம்  சொல்லுங்கள்…

இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது

இவ்வாறு ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.