கனிமொழி புகார் எதிரொலி: விசாரணை நடத்த சிஐஎஸ்எப் உத்தரவு

Must read

டெல்லி: கனிமொழியிடம் இந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற துறைசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கிறார் திமுக எம்.பி கனிமொழி. அதற்காக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட உள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்காக சென்னை விமான நிலையம் சென்றுள்ளார் கனிமொழி.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேறு மாநில சிஐஎஸ்எப் பெண் அதிகாரி ஒருவர் தம்மிடம் மொழி தொடர்பாக கேட்டதை கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனிமொழியிடம் நடந்து அந்த பெண் அதிகாரிக்கு கண்டனங்கள் குவிந்தன.

இந் நிலையில், கனிமொழியிடம் இந்தியில் அதிகாரி கேள்வி கேட்டது பற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சிஐஎஸ்எப் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் யாரிடமும் மொழி தொடர்பாக கேட்பதுமில்லை என்றும்  சிஐஎஸ்எப் என்றும் கூறி உள்ளது.

More articles

Latest article