
சென்னை:
திரையுலகில் நிலவும் பிரச்சினை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் புதிய படங்கள் வெளியிடப்படாமல் உள்ளது. க்யூப் டிஜிட்டல் கட்டண உயர்வை கண்டித்து ஒரு மாதத்திற்கும் மேலாக திரைத்துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சந்திப்பு பேசினார்.
ஏற்கனவே கியூப் டிஜிட்டல் நிறுவனங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருடன் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், திரையுலகை சேர்ந்தவர்கள் கடந்த ஒரு மாதமாக வேலையின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக அரசு திரையுலகினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்தது. அதன்படி டிஜிட்டல் நிறுவன அதிகாரிகள், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் ஆகியோர் அரசு தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்னும் ஓரிரு நாளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]