சென்னை:
கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று முதல்வர் எடப்பாடியை பழனிச்சாமியை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இதில் அமைச்சர்கள், அதிகாரகள் கலந்துகொண்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், கூட்டத்தில் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
Patrikai.com official YouTube Channel