இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சிண்ட்ரெல்லா.
இந்த படத்தில் ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும் நடித்து வருகிறார். மற்றொரு வேடம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் ஸ்டோரியை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
திகில்-திரில்லர்-கற்பனை கதைக் களத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை SSI ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். ராம்மி இப்படத்திற்கான கேமரா வேலைகளை கவனிக்க லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
தற்போது படத்தின் மொத்த பணிகளும் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 24ஆம் தேதி ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் வெளியாகவுள்ளது.
அதற்கான முன்னோட்டமாகப் படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘சிண்ட்ரெல்லா’ பட ட்ரைலரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் தனுஷ், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.