வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.

கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று கொண்டாடப்படுகிறது.
கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.
இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி வருகை தந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel