டெல்லி: ஒமிக்ரான தொற்று பரவலை தடுக்க, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை வீடுகளில் கொண்டாடுவது நல்லது என நிதிஆயோக் நிதி அதிகாரி டாக்டர் வி.கே.பால் தெரிவித்து உள்ளார்

இந்தியாவில் வேகமாக ஓமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 101 பேர் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேசிய கொரோனா தடுப்பு பிரிவு தலைவர் வி.கே. பால், தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறழ்வு வைரசான ஒமிக்ரான் உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது குறிப்பாக, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. “ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் நிலைமை மோசமாகிவிட்டது என்பதை பொது களத்தில் உள்ள தகவல்களிலிருந்து நீங்கள் அறிவீர்கள்.

பல நாடுகளில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் பயணம் மற்றும் விருந்தில் ஈடுபட்டு வருவதால், அங்கு ஒமிக்ரான பரவல் தீவிரமடைந்து உள்ளன.  இதுபோன்ற  சூழல் இந்தியாவில் ஏற்பட்டால், தினசரி 14 லட்சம் முதல் 15 லட்சம் வழக்குகள் பதிவாகும். அதனால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்ப்பது நல்லது.

இந்தியாவிலும் ஒமிக்ரான பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் ஐரோப்பிய நாடுகளில் சுமார், 80 சதவிதம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியாவது போடப்பட்டுள்ளது.   இருந்தாலும்,  கடந்த சில நாட்களில் ஒமிக்ரான் பாதிப்பு 101 ஆக அதிகரித்துள்ளது.  இதே வேகத்தில்  பரவினால் தினமும் 14 முதல் 15 லட்சம் பேர்  வரை தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். “அத்தகைய சூழ்நிலை இங்கு உருவாகாமல் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். மாறாக, இதுபோன்ற சூழ்நிலையையும் திறம்பட எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும், மத்திய அரசு இப்போதே கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது நல்லது.

டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் அதிவேகமானது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.  பொதுமக்கள் வெளியூர், வெளிநாடு செல்வதை தவிர்க்க வேண்டும், விழாக்காலங்களில் கூடுவதையும் தவிர்ப்பது மட்டுமின்றி, வர இருக்கும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை பொது இடங்களில் கொண்டாடாமல், தவிர்த்து, தங்களது  வீடுகளில் கொண்டாடுவது நல்லது.

இவ்வாறு டாக்டர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.