‘சீயான்’ விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மகான்’ திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இந்நிலையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் விக்ரம்.

விக்ரமின் 61வது படமாக அமையவிருக்கும் இந்த படத்திற்கு அவரது ரசிகர்கள் #சீயான்61 என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியானது பா. ரஞ்சித் இயக்கவிருக்கும் இந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை ஏற்படுத்தியதை விட அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபு தேவா, சம்யுக்தா ஹெக்டே நடிப்பில் ‘தேள்’ படத்திற்கு பிறகு இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார் ஞானவேல்ராஜா.