சென்னை: இந்த மாதம், சித்தா பவுர்ணமி இன்று மாலை 0555 மணிக்கு ( 17:55)  தொடங்கி நாளை (23ந்தேதி) இரவி   19:48  (இரவு 7.48மணி) வரை உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு 6600  சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

2024 ஆம் ஆண்டின், சித்ரா பௌர்ணமி இன்று மாலை தொடங்கி நாளை இரவு வரை உள்ளது. இதை முன்னிட்டு, இன்றும், நாளையும்,  சென்னை மற்றும்  பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணா மலைக்கு 6600 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile APP மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த வசதியினை பொதுமக்கள் பயன்டுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 22, 23ம் தேதிகளில் ஏராளமானோர் பயணிப்பர். இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் 22ம் தேதி 527 பேருந்துகளும், 23ம் தேதி 628 பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. மேலும், சென்னை மாதவரத்தில் இருந்து வரும் 22ம்தேதி 30 பேருந்துகளும், 23ம் தேதி 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ம் தேதி அன்று 910 பேருந்துகளும், 23ம் தேதி அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏசி பேருந்துகள் 40, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 22ம்தேதி மற்றும் 23ம் தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படும் என்றும்,   அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile APP மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இந்த வசதியினை பொதுமக்கள் பயன்டுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.