மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு மீனாட்சி அம்மன் அருளபாலித்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
மங்கல வாத்தியம் , வேதமந்திரங்கள் முழங்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கலயாணம் நடைபெற்றது.
மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து பெண்கள் புதுதாலி கயிறு அணிந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் தடபுடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 7500 அரிசி 6 டன் காய்கறிகள் வரவழைக்கப்பட்டு விருந்துக்கான உணவுவகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.