’’பாகுபலி’’ பாகுபலி- 2’’ ஆகிய பிரமாண்ட படங்களை கொடுத்த எஸ்.எஸ். ராஜமவுலி, அடுத்து ‘’RRR’’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
தெலுங்கு நடிகர்கள் ராம்சரண், ஜுனியர் என்.டி.ஆர்.ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்தியா முழுமைக்குமான படமாக இந்த படம் இருக்க வேண்டும் என நினைத்த ராஜமவுலி, தமிழில் இருந்து சமுத்திரக்கனி, இந்தியில் இருந்து அஜய்தேவ் கான், அலியா பட் ஆகியோரை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.
கொரோனாவால் எட்டு மாதங்கள் தேங்கி கிடந்த இந்தப்படம் மீண்டும், நகர ஆரம்பித்துள்ளது.
இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த படம் ‘டப்பிங்’ செய்யப்படுகிறது.
தெலுங்குப்படம் என்ற சாயம் இதன் மீது படிந்து விடக்கூடாது என்பதற்காக, அந்தந்த மொழிகளில் பிரபலமானவர்களை வைத்து ’’RRR’’ படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுக்க வைக்க முடிவு செய்துள்ளார், ராஜமவுலி.
தமிழ் படத்துக்கு விஜய் சேதுபதி, இரு ஹீரோக்களில் ஒருவருக்கு குரல் கொடுப்பார்.
மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் அமீர்கானும், கன்னடத்தில் சிவராஜ் குமாரும் குரல் கொடுக்க உள்ளனர்.
ஒரிஜினல் தெலுங்கு படத்தில் ஹீரோக்கள் நீங்கலான பிற கேரக்டர்களுக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ‘’வாய்ஸ்’ அளிக்க முன் வந்துள்ளனர்.
-பா.பாரதி.