அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய தெலுங்கு படம்- புஷ்பா. பிரபல டைரக்டர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இதன் ஷுட்டிங் தொடங்கியுள்ளது.
இந்த படத்துக்காக அல்லு அர்ஜுன் தலைமுடியை நீளமாக வளர்த்துள்ளார்.
இந்த படத்தில் நம்ம ஊர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு தேச ஊடகங்களில் பல்வேறு செய்திகள் உலாவருகின்றன.
செம்மர கடத்தல் காரர்களின் வாழ்க்கையை களமாக கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் மொத்தம் 9 வில்லன்கள் நடிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகி உள்ளன.
அதில் இருவர், நம்ம ஊர் ஹீரோவான ’’சீயான்’ விக்ரம் மற்றும் பாபி சின்ஹா.
விசாகப்பட்டினம் ஷுட்டிங்கை முடித்து விட்டு, படக்குழு ராஜமுந்திரிக்கு செல்கிறது.
-பா.பாரதி.