தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் ஹைதராபாத், மாதாப்பூரில் உள்ள கேபிள் பாலத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றுக்கொண்டு இருக்கும் போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

சுயநினைவை இழந்த நிலையில், அவர் மாதப்பூரில் உள்ள மெடிகோவர் மருத்துவமனையில் (Medicover Hospital) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு (Apollo Hospitals) மாற்றப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

இதுக்குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து இரவு 8.30 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தார்.