உடுமலை:

கோவை மாவட்டத்தில் வனப்பகுதிகளை சேதப்படுத்தியும், அந்த பகுதி மக்களை யும் மிரட்டி வந்த சின்னத்தம்பி காட்டு யானை, பெரும் போராட்டத்துக்கு பிறகு, பிடித்து வண்டியில் ஏற்றி காட்டுக்குள் விடப்பட்ட நிலையில், மீண்டும் ஊருக்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மலை கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி

கோவை மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம்  வனப்பகுதியில் கடந்த சில நாட் களாக காட்டுயானையானை சின்னதம்பி அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தது. அதை விரட்ட முயன்ற விவசாயிகளையும், யானை மிரட்டியது.

இது தொடர்பாக வனத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் வெடி வெடித்து சின்னத்தம்பியை விரட்ட முயற்சித்தும், அவர்களுக்கு டிமிடிக்கு கொடுத்து விட்டு மீண்டும் ஊருக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வந்தது.

அதையடுத்து  சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்திய வனத்துறையினர், கும்பி யானை மூலம் அதை வாகனத்தில் ஏற்றி டாப்சிலிப் வனப்பகுதியில் கொண்டு விட்டனர். அத்துடன் சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.

இந்த நிலையில்,  சின்னதம்பி நேற்று மீண்டும் ஊருக்குள் புகுந்ந்தது. இதை கண்ட அந்தப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து மீண்டும் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள்  சின்னதம்பியை  மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் வாகனத்தில் ஏற்றப்பட்ட சின்னதம்பி

இதற்கிடையில்,  சின்னதம்பியை தேடி பெண் யானையும் அதன் குட்டிகளும் ஊருக்குள் சுற்றிவந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அந்த பகுதிகிளில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.

சின்னதம்பி உடலில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் யானையின் இருப்பிடத்தை வனத்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதன்படி இன்று காலை உடுமலை அருகே முக்கோணம் பகுதியில் சின்னதம்பி சுற்றி வருவதாகவும், மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் ஏற்

இது குறித்து கூறிய  மாவட்ட அலுவலர் மாரிமுத்து, “டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்துள் ளது. இந்த யானையின் நடமாட்டத்தை ரேடியோ காலர் கருவி உதவியுடன் கண்காணித்து வருகிறோம். ஒரு வாரம் அதன் நடமாட்டம் கண்காணிக்கப்படும். விளை நிலங்களில் சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பின் 2 கும்கி யானைகள் துணையுடன் வனப்பகுதிக்குள் விரட்டப்படும்.

சின்னதம்பியை மீண்டும் இடமாற்றம் செய்வதோ அல்லது பிடிப்பது குறித்து மேல் அதிகாரிகளின் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.